நா.த.க. சார்பில் கோவையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் சீமான் பேசியது, நா.த.க. நிருவாகிகளிடம் கலகலப்பையும் கலக்கத்தையும் உண்டாக்கியுள்ளது.
”வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கெல்லாம் நிலம் பறிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட மக்கள் கிடக்கிறார்களோ அங்கு உரிமை முழக்கமாக பெண்ணின் குரலாகத்தான் இருக்கவேண்டும்; இதைப் புரிந்துகொள்ளாமல் நான் நிக்கிறேன் நீ நிக்கிறேன்னா போய் நில்லு; கட்சி இருக்கு போ... நீ சொல்ற சீட்டை உடனே ஸ்டாலின் குடுத்திருவாப்ல... என் தம்பி விஜய்கூட குடுத்திருவாப்ல... நானே சொல்லிவிட்றேன்... இந்தப் படையைச் சரியாக வழிநடத்திக்கொண்டுபோய் வென்றுமுடிப்பேன்னு நம்பிக்கை இருந்தா என்கூட வரலாம். இல்லைனா நீங்க போகலாம்.” என்று சீமான் பேசியதும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் எப்பாடுபட்டாவது வெல்ல வேண்டும்; வென்று வெளியில் வந்தால் பல்லக்கில் ஏற்றி மாலை; தோத்துட்டுவந்தால் பாடையில் ஏற்றி மாலை; எது எப்படிப் பார்த்தாலும் எப்படியும் மாலை உறுதி என சீமான் சொன்னபோது, எல்லாரும் கலகலவென்று சிரித்தார்கள்.
தோற்கிறாற்போல இருந்தால் பால்டாயிலைக் குடிச்சிட்டுப் படுத்துங்க; இல்லைனா பச்சைமட்டைய எடுத்து கொன்னுடுவேன் என்று சீமான் பேசினார்.