வைகோ 
செய்திகள்

பழனிசாமி ஏன் மௌனசாமியாக ஆனார்?- வைகோ கேள்வி

Staff Writer

எடப்பாடி பழனிசாமி ஏன் மௌனசாமியாக ஆனார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கேட்டார். 

“முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக்கொள்ள மாட்டோம் என அண்மையில்தான் கூறினார். பா.ஜ.க.வின் சில கொள்கைகளை விமர்சித்தார். அண்மையில் அவரும் செங்கோட்டையன் 2 முறை தில்லிக்குச் சென்றதும் அமித்ஷா சென்னைக்கு வந்ததும் கூட்டணி அரசு அமைக்கப்போவதாகச் சொன்னதுமாக நடந்திருக்கிறது. பழனிசாமி ஒரு வார்த்தை பேசவில்லை. அவர் தலைமையில் கூட்டணி அமைகிறது என்றால், அவர் 5 நிமிடம் வரவேற்றுப் பேசி, பிறகு பா.ஜ.க. பேசினால் கூட்டணி கூட்டணியாகத் தெரியும். அவர் மௌனசாமி போலப் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டு, முழுவதையும் அமித்ஷாவே பேசி, சில கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள் எல்லாம், தமிழ்நாட்டுக்குச் சாதகமாக எந்த முடிவையும் அவர் அறிவிக்கவும் இல்லை.” என்று வைகோ கூறினார்.

இந்தக் கூட்டணி நிலைக்குமா, நீடிக்குமா குலையுமா என எதுவும் தெரியாது என்றும் வைகோ கூறினார்.