பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணி இருக்கிறதா என்பது பற்றி அவர் சென்னையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டு தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டணி யாரிடமும் நாங்கள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இப்போதைக்கு தே.ஜ. கூட்டணியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சென்னைக்கு வந்த அமித்ஷா தங்களை அழைக்காததில் வருத்தம் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
உடனிருந்த வைத்திலிங்கம், “ நாங்கள் இல்லாமல் அ.தி.மு.க. வெற்றி பெறாது.” என்றார்.