அன்புமணி  
செய்திகள்

பா.ம.க. மாவட்டச் செயலாளர் கைது- அன்புமணி கண்டனம்!

Staff Writer

பா.ம.க. மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது; அவரை விடுதலை செய்யவேண்டும் என்று 

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்்திியுள்்ளார்.

"திண்டிவனத்தில் அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ், தலைவர் பாவாடைராயன் உள்ளிட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் தாக்கியதில் 3 பெண்கள் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர்  பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்." என்று அவர் தன் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும். அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது.  கைது செய்யப்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் அனைவரையும்  விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

https://x.com/draramadoss/status/1912498194833109370