பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி 
செய்திகள்

பா.ம.க.வில் சின்ன சலசலப்புதான் - ஜி.கே.மணி சொல்கிறார்!

Staff Writer

பா.ம.க.வில் இராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையிலான உரசல் போக்கு சின்ன சலசலப்புதான் என்று அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்தபின்னர் வெளியே வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்து இதைத் தெரிவித்தார். 

முன்னதாக, காலையிலேயே அவைக்குள் சென்றபோது அவரிடம் இந்த விவகாரத்தைப் பற்றி செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அவை நடவடிக்கைகள் முடிந்தபின்னர் பேசுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். 

அதன்படி, பேரவை வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை விழாவில் இராமதாசும் அன்புமணியும் சேர்ந்தே பங்கேற்பார்கள் என்றும் ”பா.ம.க.வுக்குள் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்பு... நல்லா போய்கிட்டிருக்கு... சரியாப் போச்சு; அது ஒரு பிரச்னை இல்லை; குறைந்துவிட்டது, சரியாகிவிட்டது. அந்தப் பிரச்னை பெரிதாகாது.” என்றும் கூறினார்.