பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் 
செய்திகள்

பா.ம.க.வுக்கு நானே தலைவர்- இராமதாஸ் அதிரடி!

Staff Writer

”பா.ம.க.வில் இனி நானே தலைவராகச் செயல்படப்போகிறேன்” என்று அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். 

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

தற்போதைய தலைவர் அன்புமணியைக் கட்சியின் செயல்தலைவராக மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாநிலப் பதவி வரிசைப்படி ஜி.கே.மணி தொடர்ந்து கௌரவத் தலைவராக இருப்பார். 

பொதுச்செயலாளராக வடிவேல் இராவணனும், பொருளாளராக திலகபாமாவும் இருப்பார்கள் என்றும் இராமதாசும் அறிவித்தார். 

மாநிலத் துணைத்தலைவர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், அணிப் பொறுப்பாளர்கள் தற்போது உள்ளபடி செயல்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.