அடுத்த மாதம் முதல் தேதியன்று ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல்செய்கிறார்.
முன்னதாக, வரும் 31ஆம் தேதியன்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெறும். அதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார்.
இந்த நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 13ஆம் தேதிவரை நடைபெறும்.
அதன் தொடர்ச்சியாக மார்ச் 10 முதல் ஏப்ரல் 24வரை அடுத்த அமர்வு நடைபெறும் என்று நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள பொதுமக்கள் மட்டுமின்றி தொழில் நிறுவனங்களும்கூட பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கையில் அவை பூர்த்தியாகுமா?