செய்திகள்

பிரசாந்து கிசோரு என்ன தமிழ்நாட்டை சிருஷ்டிச்சவரா?- எ.வ.வேலு காட்டம்!

Staff Writer

நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு 20சதவீதம்வரை வாக்கு கிடைக்கலாம் என தேர்தல் தொழிலதிபர் பிரசாந்த் கிசோர் கூறியிருந்தார். 

விஜய்யை தமிழகத்தில் சந்தித்த பின்னர், அவர் இவ்வாறு கூறியதற்கு பல்வேறு தரப்பினர் அவரவர் கருத்துகளைக் கூறியிருந்தனர். இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில், அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, பி.கிசோரின் கருத்து பற்றி அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு வேலு, அவர் என்ன தமிழ்நாட்டை சிருஷ்டிச்சவரா என எதிர்க்கேள்வி கேட்டார். அவரின் வியாபாரத்துக்காக எதையாவது சொல்வார் என்றும் அவர் கூறினார். 

மாறாக, இந்தியா டுடே பத்திரிகையில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. ஆட்சிக்கு கூடுதல் 5% வாக்கு சதவீதம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். 

அதில் பணியாற்றுபவர்கள் யாரும் தி.மு.க. உறுப்பினர்கள் இல்லை என்றும் அது நடுநிலை பத்திரிகை என்றும் அமைச்சர் வேலு விவரித்தார்.