செய்திகள்

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

Staff Writer

பிரதமர் நரேந்திர மோடியை இசைஞானி இளையராஜா இன்று சந்தித்துப் பேசினார். 

சிம்பொனி இசையமைத்த பின்னர் இன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இளையராஜா, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் தில்லிக்குச் சென்றுள்ளார். 

சிம்பொனி இசையமைத்ததை முன்னிட்டு பிரதமர் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். 

இதுகுறித்து தன் சமூக ஊடகப் பக்கத்தில், “பிரதமர் மோடியுடனான சந்திப்பு மறக்கமுடியாதது. வேலியண்ட் சிம்பொனி உட்பட பல விசயங்கள் குறித்து பேசினோம்.” என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.