செய்திகள்

பிரிவினைக்கு இடமில்லை- துணைவேந்தர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை!

Staff Writer

தமிழகப் பல்கலைக்கழகங்களில் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு இடமிருக்கக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். 

இன்று சென்னையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசுகையில் அவர் இதை வலியுறுத்தினார். 

மேலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்பாடுகளும் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். 

கட்டுக்கதைகளுக்கு பல்கலைக்கழக ங்களில் இடம் அளிக்கக்கூடாது என்றும் ஸ்டாலின் கண்டிப்புடன் கூறினார்.