செய்திகள்

மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறப்பு!

Staff Writer

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  

இதுகுறித்து நீர்ப்பாசனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு 01.05.2025 முதல்  28.08.2025 வரை  120 நாட்களுக்கு  நீர்   இருப்பை  பொறுத்து  609.99  மி.க.அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.     இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம் மற்றும் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமங்களில் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.