தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜூன் முதல் தேதியன்று மதுரையில் நடத்தப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் கட்சி அணிகளை உசுப்பிவிட்டு வருகின்றன. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சென்னையில் நேற்று செயற்குழுக் கூட்டத்தை நடத்தியது.
தி.மு.க.வின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் முதல் நாளன்று மதுரையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது எனும் நிலையில், இந்தப் பொதுக்குழு கவனிக்கத்தக்க வகையில் நடத்தப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.