செய்திகள்

மனைவியைப் பிரிந்தார் டிரம்ப்- நூலாசிரியர் அதிர்ச்சித் தகவல்!

Staff Writer

அமெரிக்க அரசின் அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மனைவி மெலானியாவைப் பிரிந்துவிட்டார் என்று டிரம்பின் வாழ்க்கை வரலாற்றுக் கதாசிரிரியர் மைக்கேல் உல்ஃப் தகவல் வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் வந்ததிலிருந்தே மெலானியா சொல்லிக்கொள்ளும்படியாக பொதுவெளியில் வந்ததில்லை என்றும் இரண்டாம் முறை டிரம்ப் அதிபரான ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு மிகச் சில முறைகளே மெலானியா பொதுவெளியில் காட்சி தந்துள்ளார் என்றும் உல்ஃப் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் குறித்து பல நூல்களை எழுதியுள்ள மைக்கேல் உல்ஃப், மெலானியா சற்று இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காகவே வெள்ளை மாளிகைப் பக்கம் அதிகமாக இருப்பதில்லை என்றும் கூறியுள்ளார், உல்ஃப்.

அமெரிக்காவின் தி டெய்லி பாட்காஸ்ட் ஊடகத்தில் டிரம்பின் இரண்டாம் நிர்வாகத்தில் அவரின் மனைவியின் பாத்திரம் எப்படி எனக் கேட்டதற்கு, உல்ஃப் இப்படிக் கூறியுள்ளார்.

“அவர்கள் தனித்தனியாக வாழ்ந்துவருகிறார்கள். சரியாகச் சொல்லவேண்டும் என்றால், அமெரிக்க அதிபரும் அவரின் மனைவியும் பிரிந்துவிட்டார்கள்.” என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார், உல்ஃப்.

ஆனால் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் செங், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.