மாரிதாஸ் 
செய்திகள்

மாரிதாஸ் எடுத்திருக்கும் புதிய அவதாரம்!

Staff Writer

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் வலதுசாரி யூட்டியூபர் மாரிதாஸ், புதிய தொழில் முனைவோர் அவதாரம் எடுத்துள்ளார். 

ஆளில்லா விமானத் துறையில் அவரும் கால்பதித்துள்ளார். அவர்சார்ந்த பிளிப் அண்டு ஸ்டீப் நிறுவனத்தின் சார்பில் முதலாவது ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டத்தை நடத்தவுள்ளனர். அதைத் தகவலாகக் குறிப்பிட்டு மாரிதாஸ் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.   

”எங்கள் Flip and steep தனது முதலாவது UAV சோதனை ஓட்டத்தை சில நாள்களில் நடத்த இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறேன். அதற்கடுத்த இலக்காக 250 கி.மீ.வரை சென்று முழு surveying and mapping வேலையை வெற்றிகரமாக முடிப்பது. இந்த வகையில் 12 இலக்குகளை நோக்கி flip and steep தன் முழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.

இதற்காக உதவிகரமாக இருந்த Drone frame CAD designers, RF Radio frequency Analyst, Ground station and flight controller, Mission planer Software, 3D prototype & filament, composite materials analysis என technical உதவிகள் தயக்கம் இல்லாமல் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த சில வாரங்களில் அடுத்த அடுத்த இலக்கை கடந்து நல்ல செய்திகளைக் கொடுப்போம் என நம்பிக்கை கொள்கிறோம்.

முழு திட்டவிவரங்களை விரைவில் காணொளியாக வெளியிட முயற்சிக்கிறேன்.
நன்றி.” என்று மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, அவர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.