செய்திகள்

மின்தடை புகார் தந்தால் எஸ்.ஐ. மச்சான் மூலம் கேஸ்- அடாவடி ஊழியர் மிரட்டல்!

Staff Writer

மின்சாரத்தடை ஏற்பட்டு புகார் தந்தவரை எஸ்.ஐ. மச்சான் மூலம் வழக்கு போடுவேன் என மின்வாரிய ஊழியர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தேர்தல் நெருங்கும் நிலையில் அமைச்சர் மட்டத்தில் இருப்பவர்களே எக்குத்தப்பாகப் பேசி பதவி இழந்துவரும் நிலையில், மின்வாரிய ஊழியர் இப்படிப் பேசியிருப்பது அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

”கரண்ட்ஆஃப்ஆவும் வரும் போகும். எல்லாத்துக்கும் போன் பண்ணக்கூடாது. ஒரு மணி நேரம் இல்லையா நாலு மணி நேரம் இல்லையா அப்போதான் சொல்லணும். ” எனப் புகார் தந்தவரை மிரட்டினார் ஊழியர். 

அதற்கு புகாரளித்தவர் நான்கு முறை என வாயெடுப்பதற்குள், ”நாலு என்ன நாப்பது மணி நேரம் ஆவட்டும். உனுக்கு என்னா பிரச்சினை, சொல்லு. இதுக்கு மேல பத்து நிமிசம் ஆகும், அரை மணி நேரம் ஆவும். டிஎஸ்பிகிட்ட கம்ப்ளைண்டு குடுத்திருவேன். டவுன் எஸ்.ஐ. என் மச்சான்தான் பாத்துக்க... கம்ப்ளைண்டு பண்றத நிறுத்திக்க... அப்புறம் வேற மாதிரி ஆயிடும்” என்று அந்த மின்வாரிய அடாவடி ஊழியர் மிரட்டிவிட்டு தன் வாகனத்தில் புறப்பட்டார்.