ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - யுபிஎஸ்சியின் வருடாந்திரத் தேர்வு முடிவு இன்று பிற்பகலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டப் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் இந்திய அளவில் 23ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட்ட இந்திய அளவிலான சேவைப் பணிகளுக்கான அதிகாரிகள் தேர்வின் இறுதி முடிவுகளில் இந்த ஆண்டு 1009 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில், தமிழக அரசின் தமிழ்வழியில் தேர்வு எழுதிய இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் எனும் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டவர்களில் 50 பேர் இத்தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.