செய்திகள்

விஜய் கட்சியில் ஐ.ஆர்.எஸ். அதிகாரிக்கு கொ.ப.செ. பதவி!

Staff Writer

விஜய்யின் த.வெ.க.வில் அண்மையில் இணைந்த இந்திய வருவாய்த் துறை அதிகாரி அருண்ராஜுக்கு அக்கட்சியின் கொள்கைப்பரப்புப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் விஜய் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.இராஜலட்சுமி, ஏ.ஸ்ரீதரன், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் த.வெ.க.வில் இணையவுள்ளனர்.