செய்திகள்

விவி மினரல், பிற கனிம வள நிறுவனங்களில் சிபிஐ சோதனை!

Staff Writer

தமிழ்நாட்டையே கலக்கியெடுத்த கனிம வளக் கொள்ளைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய வி.வி. மினரல்ஸ் உட்பட பல கனிம வள நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை, நெல்லை உட்பட ஐந்து இடங்களில் மொத்தம் 15 இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று காலை முதல் தேடுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கனிம வள அகழ்வில் ஈடுபட்டு தமிழக அரசுக்குச் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்தாமலும் அனுமதியை மீறியும் செயல்பட்டதால், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டது. 

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி இன்று சோதனை நடத்தப்பட்டுவருகிறது.