ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது சீமான் அதிரடியாகப் பேசி கவனத்தை ஈர்த்துவருகிறார். மத்திய, மாநில ஆளும் கட்சிகளைக் கடுமையாகச் சாடியும் அவர் பேசுவதற்கு பலன் கிடைக்கும் என அந்தக் கட்சியினர் கணக்குப் போடுகின்றனர்.
இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்னர், பிரச்சாரத்தின்போது வெடிகுண்டை வீசுவேன் என அவர் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்குகள் பதியவேண்டும்; அவர் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என பல அமைப்பினரும் தனி நபர்களும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தினர் சீமான் மீது கலவரத்தைத் தூண்டுதல், மக்களை அச்சுறுத்தும்படி பேசுதல் ஆகிய குற்றங்களுக்காக மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.