மனிதக்கழிவை குடிநீர்த் தொட்டியில் கொட்டிய புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் வெளியூர்களைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளே செல்லத் தடை நீடித்துவந்தது.
ஆளும் கூட்டணியில் உள்ள வி.சி.க., இடதுசாரி கட்சிகளின் சார்பில் தடையை மீறி போராட்டங்களும் நடத்தப்பட்டன. அப்போது அவர்கள் கைதும்செய்யப்பட்டனர்.
பின்னர், இவ்வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பீகார் மாநிலம், கராகட் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் சிபிஐ-எம்எல்-லிபரேசன் கட்சியைச் சேர்ந்தவருமான இராசாராம்சிங் இன்று வேங்கைவயல் கிராமத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
ஊர் மக்கள் அவரிடம் பிரச்னைகளை எடுத்துக்கூறினர்.