DELL
செய்திகள்

வேல்முருகனுக்கு பட்ஜெட்டில் அதிருப்தி என்ன?

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று முன்வைக்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ஆளும் கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அதிருப்தியான கருத்து ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“ ஒன்றிய அரசு உரிய நிதி பங்கீட்டை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் வஞ்சித்தபோதும் லட்சக்கணக்கான கோடி கடன்களைக் கொண்டிருந்தபோதும் நிதியமைச்சர் வாசித்தளித்த நிதிநிலை அறிக்கை ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, ஈழத் தமிழர்களுக்கு 3000-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தரும் அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்திட சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, தமிழ்-தமிழர் மேம்பாட்டுக்கு ஏராளமான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பு, ஈழத்தமிழர் சகோதரர்களுக்கு இரட்டைக் குடியுரிமை ஆகிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது.” என்று வேல்முருகன் கூறினார்.