சட்டமன்றத்தேர்தலில் என்னைப் போல மு.க.ஸ்டாலின் தனித்துப் போட்டியிடத் தயாரா என நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேட்டுள்ளார்.
தருமபுரியில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
தனித்து நின்று என்னுடன் போட்டிபோட முடியுமா? 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் காசு தராமல் தி.மு.க.வால் வெற்றிபெற முடியுமா? என்னைப் போல தனியாக நின்று என்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா? வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தமிழா, திராவிடமா என தனித்துப் போட்டியிடுவோமா என்றும் சீமான் சவால் விடுத்தார்.