தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையைத் திருப்பதிக்குக் கொண்டுசென்ற வேளாண் அமைச்சர் வினோத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது சமூக ஊடகப் பதிவில்,
"பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியல் சாசன ஆவணம். தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்." என்று குறிப்பிட்டுள்ளார்.