அ.தி.மு.க.-வின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே அவருடைய மகன் இருந்துவருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
"என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வருவதாக பல விமர்சனங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவருகின்றன. அது தவறு. என்னுடைய மகன் அ.தி.மு.க.-வின் அடிப்படை உறுப்பினராக மட்டும் தான் இருக்கிறார். கட்சியில் எந்த பதவியிலும் இல்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். தயவுசெய்து பத்திரிகைகளும், ஊடகங்களும் அவதூறு பரப்ப வேண்டாம்." என்று கூறினார்.
இதன் மூலமாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.