மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: பா.ஜ.க.- 160, திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி- 121, இடதுசாரி கூட்டணி- 1, காங்கிரஸ்- 0.
தேர்தல் ஆணையத் தகவல் : த.வெ.க.- 108, அ.தி.மு.க.- 63, தி.மு.க.- 41, பா.ம.க.-6, காங்கிரஸ்- 5, பா.ஜ.க.- 3, சி.பி.ஐ.- 2, முசுலிம் லீக், வி.சி.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., சி.பி.எம்.-1.
திருப்போரூர்- 5 வது சுற்று முடிவில் தவெக 11000 வாக்குகள் முன்னிலை!
ஏழாவது சுற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் (23,971 வாக்குகள்) பின்னிலை. த.வெ.க. பாபு 29,425 வாக்குகள்.
பா.ம.க. 5 தொகுதிகளில் முன்னிலை.
சென்னையை அடுத்த பனையூரில் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள். விசில் அடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் முன்னிலை.
மார்க்சிஸ்ட் கட்சி பத்மநாபபுரம், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் முன்னிலை.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. போட்டியிட்ட 27 இடங்களிலும் பின்னிலை. பெரும்பாலான இடங்களில் மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றிபெற்றார். மங்களம் தொகுதியிலும் அவர் போட்டியிட்டுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் 4ஆம் சுற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் 14,141 வாக்குகள் பெற்று பின்னடைவு. த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு- 16,692 வாக்குகள்.
காலை 10.13 மணி நிலவரப்படி, த.வெ.க. 100 இடங்களில் முன்னிலை. அ.தி.மு.க.- 80, தி.மு.க.- 53, நா.த.க.-0.
முதல் சுற்றில், முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு.
முன்னிலை நிலவரம்: த.வெ.க. -89, அ.தி.மு.க.-63, தி.மு.க.- 52, நா.த.க.- 0.
முன்னிலை நிலவரம்: த.வெ.க. -71, தி.மு.க.-54, அ.தி.மு.க.- 50, நா.த.க.- 0.
திருவள்ளூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தி.மு.க. முகவர் பாஸ்கருக்கு மாரடைப்பு, மரணம்.
முன்னிலை நிலவரம்: திமுக 57; அதிமுக 27, தவெக 20; நாதக 0