Annamalai  
அரசியல்

’ஆட்டுமந்தை சக்தி’ -அண்ணாமலையை கலாய்க்கும் காயத்ரி ரகுராம்

Staff Writer

’’நாம என்ன செஞ்சாலும் அதை இந்த ஊரும் உலகமும் உத்துப்பாக்கணும் என்கிற பாலிசியின் தொடர்ச்சியாக புதிய கட்சியை தொடங்கும் திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறார் அண்ணாச்சி அண்ணாமலை.

இக்கட்சிக்காக ஒரு பிரபல தொலைக்காட்சி விலை பேசப்படுகிறது. ஒரு நாளிதழ் டீம் நான்கு மாதங்களாக போண்டா பஜ்ஜி சாப்பிட்டு பயிற்சி எடுத்து வருகிறது என்கிற தகவல்களும் கூடவே வெளிவரும் நிலையில், பாஜகவில் சிலகாலம் நடனமாடி ஸாரி நடமாடி தற்போது அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் நடிகை, நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலையின் கட்சி துவக்கத்தை நக்கலடித்து,…

நான் விரைவில் ஒரு தோசை–பக்கோடா கடையைத் தொடங்கப் போகிறேன். கடையின் மேனேஜரும் நானே, தோசை–பக்கோடா மாஸ்டரும் நானே. தோசையையும் பக்கோடாவையும் நானே செய்து, நானே சாப்பிடுவேன்! விரைவில் என் ஜோதிடர்கள், வார் ரூம் இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை உலகம் முழுவதும் பரப்புவார்கள். DMK-க்கு "தீய சக்தி", TVK-க்கு "தூய சக்தி", ADMK-க்கு "தாய் சக்தி"; என் கடைக்கு "ஆட்டு மந்தை சக்தி"!

இனி பொழுதுபோக்கும் கலாட்டாவும் ஆரம்பம்! என்று பரபரப்பாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

இப்பதிவை விட காயத்ரிக்குப் போடப்படும் பின்னூட்டங்கள் மிக சுவாரசியமாக இருக்கின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram