தமிழக முதல்வர் விஜய், திமுக, அதிமுக தலைவர்கள் தொடர்பான செய்திகளைக் கூட ஓரமாய் ஒதுக்கிவைத்துவிட்டு, ‘டெல்லி செல்லவிருக்கிறார்..சென்றே விட்டார்… ராஜினாமா செய்யப்போகிறார்…செய்தே விட்டார்…கட்சி ஆரம்பிக்கப்போகிறார்… ஆரம்பித்தே விட்டார்’ என்று கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாளிதழ்களில், சமூகவலைதளங்களில் பேனர்,பிரேக்கிங் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் அண்ணாமலை.
இந்த அண்ணாமலையின் திருவிளையாடலுக்குப் பின்னே இருப்பதும் பா.ஜ.கதான். இந்த தேர்தலில் அதிமுகவை பேக் அப் பண்ணியதுபோல, அதே சூட்டோடு திமுகவையும் பேக் அப் செய்து இனி விஜய்க்குப் போட்டி என்றால் அது அண்ணாமலைதான் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தவே ‘வி த லீடர்’ போன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்கிறார்கள்.
தனது புதிய அரசியல் சேவையின் தேவை வேண்டி நீண்ட நெடிய பேட்டி கொடுத்த அண்ணாமலை அப்பேட்டியில் ஒரு இடத்தில் பாஜகவை குறை சொல்லவில்லை. மட்டுமின்றி ரஜினி கட்சி துவங்க நினைத்தபோது தன்னை அழைத்தார் என்றதோடு ஏகப்பட்ட ரஜினி புராணம். அதாவது தான் இப்போது துவங்கியிருக்கிற வி த லீடர் அமைப்புக்கு ரஜினியின் ஆதரவு உண்டு என்று ஆணித்தரமாக சொல்கிறார். மேலும் கூடுதல் தகவலாக, அவருடைய கட்சி துவங்கிய 24 மணி நேரத்துக்குள் 15 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றன.
இச்செய்திகள் களைகட்டிக்கொண்டிருக்கும் வேளையில் ரஜினியின் மனைவி லதா ’மக்கள் மேடை’ என்கிற பெயரில் ஒரு அரசியல் அமைப்பு துவங்கி ‘வாங்க நாமும் சமூகத்துக்கு சேவை செய்யலாம்’ என்று அழைப்பு விடுத்து காமெடி செய்துகொண்டிருக்கிறார்.
ஆனால் லதாவின் இந்த அழைப்புக்கு பரிதாப ரெஸ்பான்ஸ். நாளிதழ்களில் எட்டாம் பக்கத்தின் ஈசான மூலையில் ஏழே வரிகளில் கடமைக்குப் போட்டுவிட்டிருக்கிறார்கள்.
இது குறித்து லதா கணவர் ரஜினியிடன் டிஸ்கஸ் செய்தபோது, ‘நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. என் சப்போர்ட் அண்ணாமலைக்குத்தான். அடுத்த தேர்தல்ல அண்ணாமலைதான் விஜய்’ என்று அடித்துச் சொல்லிவிட்டாராம்.
விஜய் ஜெயித்து முதல்வரான பிறகு தமிழக மெடிக்கல் ஷாப்களில் ஜெலுஸில் வியாபாரம் சூடுபிடித்திருப்பது கண்கூடாக தெரிகிறது.