vijay lawrance 
அரசியல்

திருச்சி கிழக்கு … ஆட்டத்தை நிறுத்திய உடான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ்

Staff Writer

தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு துணை முதல்வர் ஆகும் கனவில் இருந்த டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் திடீரென பின்னங்கால் பிடறியில் பட பின்வாங்கினார். லாரன்ஸுக்கு முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையில் வழங்கிய எச்சரிக்கைதான் இந்த பின்வாங்கலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

’26 தேர்தலில் விஜய் திடீர் முதல்வரானது ஒரு சிலருக்கு, குறிப்பாக திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பெரும் நமைச்சலைக் கொடுத்துள்ளது. முதல்வராவது இவ்வளவு ஈஸியா ? ஐயகோ நாம மிஸ் பண்ணிட்டோமே என்று அவர்கள் துடியாய்த் துடிக்கின்றனர். அவ்வரிசையில் அதிகம் துடித்துக்கொண்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், நடிகராய் இருந்தபோது தன்னிடம் நெருக்கமாக இருந்த விஜய் இப்போதும் தனது ஸ்டெப்புக்கு ஆடுவார் என்று தப்புக்கணக்கு போட்டு தன்னை திருச்சி கிழக்கு வேட்பாளர் என்று ஓபனாய் அறிவிக்கத்தொடங்கி சமூக வலைதளங்களில் வைரல் செய்தார்.

அத்தோடு நில்லாமல் தொடர்ந்து அதுகுறித்து காணொளிகள் பேசுவது, தனது சிஷ்யர்கள் சிலரை வைத்து அண்ணா நீங்க அரசியலுக்கு வந்தே ஆகணும் என்று போஸ்டர் அடித்து ஒட்டவைப்பது என்று அட்டகாசங்கள் புரிந்து வந்தார்.

இச்செய்தி சுமார் ஒரு மாதம் முன்பே விஜய்யின் காதுகளுக்கு சென்றது என்றாலும் மாஸ்டர் தன் பட விளம்பரங்களுக்காக இப்படி ஸ்டன்ட் அடிக்கிறார் போல என்று அமைதியாக இருந்துவிட்டார்.

ஆனாலும் மாஸ்டரின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் சென்றது. அவ்வளவு விளம்பரங்களும் மாஸ்டரின் அரசியல் வெறிதான் என்பதை உணர்ந்துகொண்ட விஜய் அவருக்கு நெருக்கமான ஒரு தயாரிப்பாளரை அழைத்து ‘இத்தொட நிறுத்தச்சொல்லுங்க. இதுவரை பேசினது எல்லாம் தப்புன்னு மன்னிப்புக் கேட்டு ஒழுக்கமா டான்ஸ் மாஸ்டர் வேலையை மட்டும் பார்க்கச் சொல்லுங்க. இங்க என் கூடவே இருந்து கட்சிக்காக உழைக்கிறவனெல்லாம் பைத்தியக்காரனா ? என்று தன் கோபத்தைக் கொட்டியிருக்கிறார்.

அதை மேற்படி தயாரிப்பாளர் லாரன்ஸுக்கு உடனே பாஸ் செய்ய , நேற்று செவ்வாயன்று 16 நிமிட வீடியோ வெளியிட்டு தனது பாவச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் கட்சிக்காக விதை விதைப்பவர்கள் தான் பழம் சாப்பிடவேண்டும் என்கிற ரீதியில் கதைவிட்டு ஒதுங்கியிருக்கிறார்.

இந்த வருங்கால முதலமைச்சர்களுங்க தொல்லை தாங்க முடியலை சாமிங்களா…

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram