விஜய்யின் பனையூர் அலுவலகம், எடப்பாடியின் இல்லம், அறிவாலயம் ஆகிய இடங்களுக்கு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகியிருக்கும் நிலையில், இன்னும் தேவைப்படுகிற 11 எம்.எல்.ஏக்களை எவ்விதம் தேத்தி விஜய் ஆட்சி அமைப்பார் என்பது குறித்த சந்தேகங்கள்தாம் தற்போதைய தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.
இறுதி நிலவரப்படி 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள தவெக அணிக்கு திருச்சி கிழக்கு, அல்லது பெரம்பூரை விஜய் ராஜினாமா செய்தாகவேண்டும் என்பதால் கைவசம் மிஞ்சப்போவது 107 தொகுதிகளே. தனி மெஜாரிட்டிக்கு தேவைப்படும் 11 எம்.எல்.ஏ. க்கள் யார்?
தேர்தலுக்கு முன்பிருந்தே விஜயுடன் கூட்டணி சேர்வதில் ஆர்வமாக இருந்து வேண்டாவெறுப்பாக திமுகவுடன் கோதாவில் குதித்த காங்கிரஸ் வசம் உள்ள ஐந்து எம்.எல்.ஏ.க்கள் முதல் சாய்ஸாக இருக்க விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியினர் கைகொடுத்தால் விஜய் சுலபமாக ஆட்சியில் அமர முடியும் என்பது பலரின் கணிப்பாக இருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் தவிர்த்த மற்றவர்கள் திமுகவுக்கு அவ்வளவு சுலபத்தில் துரோகம் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். மட்டுமன்றி இவர்கள் ஆதரவு தர முன்வரும் பட்சத்தில் துணை முதல்வர் பதவி, அமைச்சர்கள் டிமாண்ட் எதையும் வைப்பதை விஜய் கொஞ்சமும் விரும்பவில்லை என்கிறார்கள்.
விஜய்க்கான அடுத்த வாய்ப்பு சர்வ நிச்சயமாக அவரது கொள்கை எதிரியான பாஜகவின் கையில்தான் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் கொடுக்கப்பட்ட 27 தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தை மட்டும் வென்ற பாஜக தனக்கு உத்தரவிடுவதை எடப்பாடி சுத்தமாக விரும்பவில்லை என்கிறார்கள். அதிமுகவின் 11 எம்.எல்.ஏ.க்கள் எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் விஜய்யை ஆதரிக்கவேண்டும் என்பது பாஜகவின் கட்டளை. அக்கட்டளை பெரும் எரிச்சலுடன் எடப்பாடி நிராகரித்துவிட்டதாக தகவல்.
ஓ அப்படியா அப்படி கட்சி தாவல் பாதிப்பு வராம, நைட்டோட நைட்டா உன் கட்சியிலருந்து 16 பேரை எப்பிடி தூக்குறோம் பாக்குறியா ? என்று எடப்பாடிக்கு டெர்ரர் காட்டிக்கொண்டிருக்கிறதாம் டெல்லி.
எதுக்கும் கூவத்தூர் ரிசார்ட்டை நல்லா கூட்டிப்பெருக்கி வைங்கப்பா.