பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 
தேர்தல் 2026

அண்ணாமலை போட்டி இல்லை- பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Staff Writer

அ.தி.மு.க. கூட்டணியில் இழுபறியாக நீடித்துவந்த பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், பரபரப்பாகப் பேசப்பட்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை. 

அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் போட்டியிடுகிறார். 

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். 

சென்னை, மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுகிறார்.