தேர்தல் 2026

முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்- எனக்கே சீட் தரவில்லை!

Staff Writer

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபால் இந்தத் தேர்தலில் போட்டியிட தான் விருப்ப மனு அளித்தும் இடம் வழங்கப்படவில்லை எனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். 

இன்றைய பேட்டி ஒன்றில் அவர் இதைக் கூறியுள்ளார்.

கூவத்தூர் சம்பத்தில் அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றிய- அமைச்சர், பேரவைத்தலைவர் என்கிற பதவிகளில் இருந்த தான், இந்தத் தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்ததாகவும் ஆனால் அந்தத் தொகுதியை பா.ஜ.க.வுக்கு அளித்துவிட்டதாகவும் தனபால் ஆதங்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வேறு தொகுதி வழங்கப்படாத நிலையில், இதுகுறித்து யாரும் தன்னிடம் பேசக்கூட இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இவரது மகன் இதே அதிருப்தியைத் தெரிவித்துதான் த.வெ.க.வில் சேர்ந்து அக்கட்சியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.