சகுந்தலா ஸ்வீட் ஸ்டாலில் ஒரு காட்சி விஜய்
சிறப்புப்பக்கங்கள்

சூடான அல்வா!

Staff Writer

திருவாரூரில் பல பெரிய இனிப்புக் கடைகள் இருப்பினும் கடைவீதிக்குள் செல்பவர்களை சுண்டி இழுக்கிறது சகுந்தலா ஸ்வீட் ஸ்டால். இந்த கடையின் ஸ்பெஷலாக அல்வாவையும் மிளகு காராசேவையும் சொல்கிறார்கள். முந்திரி பகோடா, ஆனியன் பகோடாவும் இன்னும் சில கவர்ச்சி அயிட்டங்கள். காலை பதினோரு மணிக்கு சூடாக அல்வா வந்துவிடும். வாடிக்கையாளர்கள் புரசை இலையில் ஐம்பது கிராம் அல்வாவையும் மிக்சரையும் வாங்கி சுவைத்துவிட்டு செல்வது கடைத்தெருவில் காணும் காட்சி.

கடையின் உரிமையாளர் கோபால், ‘1984-இல் இருந்து கடை நடத்திவருகிறோம். கடைத்தெருவில் அலைந்து திரிந்து பொருட்களை வாங்கிக் கொண்டு செல்பவர்கள் எங்களைத் தாண்டிச் செல்கையில் நம்மிடம் வாங்கிச் செல்வார்கள். நாற்பது ஆண்டுகளாக ஈட்டிய நற்பெயரைத் தொடர்ந்து பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறோம்’ என்று சொல்கிறார். துணிக்கடைகள், நகைக்கடைகள், பலசரக்குக் கடைகள் என அடங்கிய கடை வீதியில் பத்துரூபாயில் தொடங்கி அல்வாவும் காரமும் இலையில் வைத்து ருசிக்கக் கிடைத்த இடமாக இது இருக்கிறது! இந்த பாரம்பரிய அல்வாவுக்கு என்றே திருவாரூரில் சப்பு கொட்டி சாப்பிடும் இனிப்பு ரசிகர்கள் நிறைய உண்டு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram