அந்திமழை இளங்கோவன் 
சிறப்புப்பக்கங்கள்

அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025

பரிசுத் தொகை ரூ. 50,000

Staff Writer

அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. அந்திமழை இதழ் சார்பாக நடத்தப்படும் இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ. 50,000. முதல் பரிசு 10,000, இரண்டாம் பரிசு 7500, மூன்றாம் பரிசு 5000. இவை தவிர ஆறுதல் பரிசுகளும் உண்டு. தேர்வாகும் சிறுகதைகள் அந்திமழை இதழில் பிரசுரிக்கப்படும்

விதிமுறைகள்:

  • சிறுகதைகள் எந்தக் கருவை மையப்படுத்தியும் அமையலாம்.

  • சிறுகதை சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும். அது இல்லாத கதைகளைப் பரிசீலிக்க இயலாது.

  • கலந்துகொள்வதற்கு வயதுவரம்பு இல்லை.

  • ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்ப வேண்டும். ஆயிரம் முதல் இரண்டாயிரம் சொற்களுக்குள் இருக்கவேண்டும்.

  • சமூக ஊடகத்திலோ இணையதளங்களிலோ இதற்கு முன் வெளியாகி இருக்கக்கூடாது.

  • தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

  • கதைகள் தட்டச்சு செய்யப்பட்டு ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் editorial@andhimazhai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.

  • எழுத்தாளரின் முழு முகவரி, தொலைபேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

  • பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். அந்திமழை ஆசிரியர் குழு ஆலோசனையுடன் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.

  • போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகளை முடிவுகள் வெளியாகும்வரை வேறு இதழுக்கோ, இணைய தளத்துக்கோ, சமூக ஊடகத்துக்கோ வெளியிட அனுப்பக் கூடாது.
    முடிவுகள் வெளியாகும்வரை கடிதங்கள், தொலைபேசி,
    மின்னஞ்சல் விசாரிப்புகளை போட்டி  தொடர்பாக மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

கதைகளை அனுப்பவேண்டிய

மின்னஞ்சல் முகவரி:

editorial@andhimazhai.com


கதைகள் வந்து சேரவேண்டிய இறுதிநாள்:
10/03/2025

மேலும் அறிவிப்புகளுக்கு இணைந்திருங்கள்:
அந்திமழை whatsapp சேனலில்

அந்திமழை whatsapp channel QR Code