சிறப்புப்பக்கங்கள்

கனவில் வரும் வீடு!

அருள் தாஸ், நடிகர்

சிறிய வயதில் வாழ்ந்த வீடு யாருக்கும் மறக்காது அல்லவா! அப்படித்தான் எனக்கும். இருபது வருடம் மதுரையில் வாழ்ந்த வீடு தான் எனக்கு அடிக்கடி கனவில் வரும். கனவில் அந்த வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பேன். வீட்டின் அமைப்பு, பெற்றோருடன் வாழ்ந்த நினைவுகள், சகோதரர்களுடன் வாழ்ந்த அனுபவம், அங்கு நாங்கள் வளர்த்த கோழி, வீட்டை சுற்றியிருந்த தென்னை மரங்கள், அப்பா பாத்தி கட்டி வளர்த்த கீரைகள் எல்லாம் கனவில் வரும். நடு இரவில் வெளிச்சம் இல்லாமல் கூட அந்த வீட்டில் புழங்கியிருக்கிறேன்.அந்த வீட்டின் அமைப்பு மனதில் அப்படியே பதிந்து போய் உள்ளது.  எப்போதுமே மறக்கமுடியாது வீடு அது.

அக்டோபர், 2022