சிறப்புப்பக்கங்கள்

குறை சொல்வதை தவிர்க்க வேண்டும்!

எஸ்.அழகிரிசாமி

கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். சிவாயநம என்ற மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஓர் அர்த்தம் உண்டு. ம என்றால் ஆணவங்களை அழிக்க வேண்டும். குடும்ப வாழ்விலும் அப்படித்தான் கணவன் மனைவி இடையே ஆணவங்களை அழிக்கவேண்டும். மனைவியின் குடும்பத்தாரைப் பற்றி எந்த நிலையிலும் குறை சொல்லக்கூடாது. என்னுடைய மாமனார் மாமியாரிடம் குறைகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.  சில நிகழ்ச்சிகள் நடக்கலாம். ஆனால் உங்க அம்மா இப்படி இருக்காங்க; அப்பா இப்படி இருக்காங்கன்னு நாம பேசினால் அது நமக்குப் பாதகமாகத் தான் முடியும். அதே சமயம் மனைவியும் புகுந்த வீட்டில் இருப்பவர்களைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடும். அப்ப நாம என்ன செய்யணும்? அதை

சகித்துக்கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் இல்லை என்று பேசுவதை எந்த அளவுக்குத் தவிர்க்க முடியுமோ அந்தளவுக்குத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதோ நாங்கள் திருமண வாழ்வில் இணைந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இதற்கு முதன்மையான காரணம் நாங்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்வது இல்லை. விட்டுக்கொடுத்து வாழ்கிறோம்! இந்த பண்பு வளர்ந்தால் எந்த பிரச்னையும் வராது! மனைவியாக இருக்கிறவர்கள் நம்முடன் ஒத்துப்போகிறார்களோ இல்லையோ, நாம் அவர்களுடன் ஒத்துப் போய்விட்டால் பிரச்னையே வரப்போவது இல்லை! நவீன கால உழைக்கும் தம்பதிகளிடம் இதுவே பெரிய குறையாக உள்ளது.

ஆகஸ்ட், 2022