சிறப்புப்பக்கங்கள்

சேமிப்பு உதவுகிறது!

மரு.அகிலாண்டபாரதி

நான் ஒரு அரசு மருத்துவர் என்பதால் மாத ஊதியம் வருகிறது. அதுதவிர ஒரு சின்ன கிளினிக் வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் குறைந்த அளவிற்குத் தான் வருமானம் வருகிறது. அதேபோல், என்னுடைய கணவர் மயக்கவியல் மருத்துவர். இருவரில் ஒருவருடைய வருமானத்தை சேமிக்க வேண்டும் என்பது என்னுடைய இலக்கு. முதலீடு செய்வது, வீடு கட்டுவது போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறேன். அதில் வரும் வருமானத்தை வைத்து மீண்டும் முதலீடு செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஓரளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் எங்களுடைய பொருளாதாரத்திற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. ஏனெனில் மாத சம்பளமும், கிளினிக்கில் வருகிற வருமானமும் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் கொஞ்சம் மனக்குழப்பம் இருந்தது. கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் குறைவான அளவிற்கே அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதால், கணவருடைய வேலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் கொஞ்சம் வருமானம் குறைந்தது போன்ற எண்ணம்.

 சென்ற ஆண்டு கொரோனா தொடர்பாக வந்த செய்திகள் பொருளாதாரம் தொடர்பாக ஒரு பயத்தை ஏற்படுத்தியது. இப்போது செலவுகள் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. நிர்வகிக் கூடிய அளவுக்குப்  பொருளாதாரம் உள்ளது. சேமிப்புகள் இருப்பதால் கொஞ்சம் பெரிய பலமாக இருக்கின்றது.

ஜூலை, 2021