தொடர்கள்

தமிழும் சித்தர்களும்-33

மரு. சிவக்குமார்

கிருஷ்ணனின் அவதார மகாபாரதம் நம் தமிழர் சரித்திரம், சமஸ்கிருத வடிவிலேயே நாம் அறிகின்றோம். குப்தரின் காலமே சமஸ்கிருதத்தின் பொற்காலமாக கருதப்படுகின்றது. குப்த பேரரசின் பொருளுதவியுடன் தான், 5-ம் நூற்றாண்டில் ராமாயணம், மகாபாரதம் உட்பட பெரும்பாலான சமஸ்கிருத இலக்கியங்கள் உருவாகின. ஆனால் இந்த இலக்கியங்கள் தமிழிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டவையாகவே இருக்கிறது. மரபுவழி செய்தி, புவியியல் சார்பு உண்மை, தமிழகத்தில் கிருஷ்ணர் வழிப்பாட்டு பாரம்பரியம், கலாச்சார காரணிகள், இவை தமிழகத்தின் மட்டுமே உள்ள தனித்துவமான மகாபாரத கால குறியீடுகள். 

வட இந்திய சமஸ்கிருத மகாபாரதத்தோடு இந்த நான்கு காரணிகளும் ஒத்துபோகவே இல்லை. ஆதிகால கிருஷ்ணன் கோவில் தென்தமிழகத்தை தவிர வேறெங்குமே இல்லை என்பதே தமிழர் சிறப்பு. 1300 வருடங்களுக்கு முன்னர் பாண்டியர்களால் கட்டப்பட்ட கிருஷ்ணன் கோவில், அதே பெயரிலேயே விருது நகர் அருகில் ஊராக உள்ளது. இந்த பழமையான தன்மை இந்தியாவில் வேறெங்கும் இல்லை. கிருஷ்ணன் தான் இறந்த தினத்திலிருந்து, கலியுகம் தொடங்கும் என்ற தீர்க்க தரிசனத்தை அளித்து விட்டே இறந்திருக்கிறார். மகாபாரத போர் அவருக்கு இதை உணர்த்தி இருக்க வேண்டும். அப்படி உணர்த்தியது எது? சகுனி. அப்பொழுது பிடித்த சனி இன்று வரை உலகை ஆட்டி படைத்து கொண்டிருப்பது கருப்பு நிற பரிமாண வடிவில். ஆழ்ந்த அரசியலுக்கு நான் போக விரும்பவில்லை. சனி இறப்பிற்கு காரணமான கிரகம், ஆயுள்காரகன் சனியே ஆவார். சனியின் கதிர்வீச்சுகள் ஒரு போதும் தன்மையை தருவதில்லை. யூதர்கள் தங்களை விட வளமாக வாழும் மக்களை அழப்பதையே பிறவிக் குணமாக கொண்டிருப்பதை சனியோடும், சகுனியோடும் ஒப்பிட்டு கொள்ளுங்கள். சூதாடுவதும், சதிவேலை செய்வதுமான சகுனி, மகாபாரத தொடரில் கருப்பு நிற உடையுடனே வலம் வருகின்றான். கருப்பு நிறத்திற்கான கிரகம் சனியும், ராகுவுமே. இந்த இருவரும் சேர்ந்து ஆட்டம் போட்டால் என்ன ஆகும் தெரியுமா? இன்று நாம் நம் வரலாற்று உண்மையை அழித்து, யாரென்று புரியாமல் வாழ்கிறோம் அல்லவா, அப்படி ஆகும். சனிபகவான் ஒரு இரக்கமற்ற நீதிபதி. மனிதனின் கர்ம வினைகளின்படி அவனைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற ஒரே கிரகம். இவர்தான் மற்ற கிரகங்களை வழிபடுவதைப் போல அல்லாமல் சனிபகவானுக்கு மட்டும் சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நமது சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். காலப்போக்கில் அவைகளை நாம் சரிவரப் புரிந்து கொள்ளாமல் அவற்றை தலைகீழாக செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக நமது சித்தர்கள் சனிக்கு எதிரே போய் நிற்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்கள்.

சித்தர்கள் கூறியதற்கு உண்மையான அர்த்தம் நீ சனியை வழிபட வேண்டாம் என்பது தான். சனியை வழிபட்டாலும் அதன் பிரசாதங்களை ஏன் வீட்டிற்குள் கொண்டு வராதே, சனி சம்பந்தப்பட்டதை வீட்டிற்குள் சேர்க்காதே என்றார்கள்? கடன், நோய், தரித்திரம், உடல் ஊனம், ஆயுள் இவைகள் தான் அவரிடம் இருக்கிறது. அதனால் தான் நமது ஞானிகள் சனிக்கு எதிரே நிற்காதே என்றார்கள். அனைத்து கிரகங்களும் சர்வேஸ்வரனுக்குள் அடக்கம். நவக்கிரகங்களும் ஈசனது வேலைக்காரர்கள் மட்டுமே. கிரகங்கள் எவையும் தெய்வங்கள் அல்ல. இதனை நமக்கு உணர்த்தவே ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதைகளை தெளிவாகச் சொல்லி கிரகங்களுக்கும், தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நமது சித்தர்கள் தெளிவாக்கியிருக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக நமது திருக்கோயில்களில் மூலவரை அதாவது சிவனை விடுத்து கிரகசந்நிதிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. இன்றும் பரிகாரக் கோவில்களுக்கு செல்லும் போது முதலில் மூலவரை முறைப்படி தரிசித்து, அவர் முன்பு வணங்கி அதன் பின்பே தனிக் கிரக சந்நிதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சனிக்கு ஈஸ்வர பட்டம் தமிழில் புகுந்ததும் வேதனையானதே. சனியை சமஸ்கிருதத்தில் ‘சனைச்சர்” என்று குறிப்பிடுவதன் அர்த்தம் மெதுவாக நகர்பவர் என்பதே. இதையே அந்தணர்கள் சனைச்சராய சுவாமி என்று உச்சரிப்பார்கள். இதுவே நாளடைவில் சனீஸ்வரசுவாமி என்றதே தவிர, கிரகங்களில் அவருக்கு மட்டும் ஈஸ்வர பட்டம் என்பது பொருத்தமற்ற புகுத்தப்பட்ட கதை. ஏழைகள் அனாதைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிக்கு உதவுவது, சனிக்குரிய ஓர் பரிகாரமாகும். மகர, கும்ப லக்கினகாரர்கள் பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் சனிக்கிழமை தோறும் ஏற்றி வழிப்படுவதும், ஆஞ்சநேயரை வழிப்படுவதும், பெருமாளை வழிப்படுவதும் மிகச் சிறப்பு. 

மஹா சனி பிரதோஷமன்று, சிவபெருமானை வழிப்படுதல் மிகச்சிறப்பு. சனி ஆயுளுக்கு உரியவன் என்பதால், பக்கங்கள் கிழித்தெறியபட தான் போகின்றன. அதற்குள் எவ்வளவு எழுத முடியுமோ எழுதி விடுங்கள், வாழ்க்கையும்  அப்படியே. என்றோ ஓர் நாள் இந்த ஆத்மா உடலோடு இல்லாமல் தான் போகப் போகிறது. அதற்குள் நம்மால் உதவ முடிந்ததை உதவுங்கள். கண்ணதாசனின் கவலை இல்லா மனிதன் என்ற ஓர் படத்தயாரிப்பு, அவனை நடுத்தெருவில்; நடக்க வைத்து விட்டதன் அனுபவமே, இப்பாடலாய் சிவபெருமானே பாடுவதாய் அமைந்துள்ளது. சனியை பற்றிய மீதி விளக்கங்களை அறியுமுன் இதோ சிவபெருமானே பாடுகிறார்.

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம்; தேடி

எங்கெங்கோ அலைகின்றார் - ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியார் ஞானத்தங்கமே

உன்னையே நினைத்;திருப்பான்

உண்மையை தானுரைப்பான்

ஊருக்கு பகையாவான்- ஞானத்தங்கமே

அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து

நாவினில் அன்பு வைத்து 

நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே

தொண்டுக்கென்றே அலைவான்

கேலிக்கு ஆளாவன்

கண்டுக் கொள்வாய் அவனை ஞானத்தங்கமே

அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே 

-    திருவருட்செல்வர் படத்திலிருந்து

கடவுளில் பாதியாகி, முழுசித்தனாகி, ஞானத்தங்கமாக வாழ்ந்தவர்கள் உண்டு  இத்தமிழ் பூமியில், அவர்களுக்கு சுபத்துவமான சனியின் அருள் கண்டிப்பாக இருந்தே தீர வேண்டும் என்பதும் விதி, சனி, குரு, கேது இணைவு, இதன் லக்னம் ராசியோடு தொடர்பு ஓர் சித்தன் ஜாதகமே. 

          பார்த்தால் பசுமரம் படுத்;துவிட்டால்; நெடுமரம்

          சேர்த்தால் விறகுக்காகுமா -  ஞானத்தங்கமே

           தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமோ ஞானத்தங்கமே 

-    திருவிளையாடல் படத்தில்