செய்திச்சாரல்

பிரேக் அப் டே!

Staff Writer

காதலர் தினம் முடிந்தவுடன் தொடரும் அடுத்த வாரம் எதிர்- காதலர் தினம் எனச் சொல்லப்படுகிறது. அதாவது காதலில் இல்லாதவர்கள், காதலில் தோற்றவர்களுக்கான வாரமாம் இது. இந்த வாரம் முடிகிற நாள் பிரேக் அப் தினமாக சொல்லப்படுகிறது. இதுவரை பிடிக்காத உறவில் இருப்பவர்கள், அந்த தினத்தில் தங்கள் உறவை பிரேக் அப் பண்ணிக்கொண்டு  ‘டாடா... பை பை' சொல்லலாம். இந்த ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரேக் அப் தினம் வந்தது. எவ்வளவு பேர் பிரேக் அப் சொன்னீங்கப்பூ?!

பிடிக்காவிட்டாலும்!

அச்சு ஊடகம் மக்களைச் சென்றடைய வேண்டுமானால் (delivery) நிறைய பொருட் செலவாகும். ஆனால், மின்னிதழ்களுக்கு அத்தகைய நெருக்கடி இல்லை. மக்களை சென்றடைய ஏராளமான வாய்ப்புகளை தொழில்நுட்பம் உருவாக்கி உள்ளது. ஜெயா டிவி நிருபர் பாதிக்கப்பட்டால், சன் டிவி நிருபரும் அரசியலுக்கு அப்பால் ஆதரவு அளிக்க வேண்டும். இதே போல அர்னாப் கோஸ்வாமி மீது, ஒரே சம்பவத்திற்காக அவர் மீது நான்கு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போது, அவரை எனக்கு பிடிக்காது என்றாலும், அவருக்கு ஆதரவாக நான் இருந்தேன்.

  - சித்தார்த் வரதராஜன், நன்றி: அறம் ஆன்லைன்

மீசை!

மீசைகளை வைத்து

வீரத்தைக் கணக்கிட்டால்.....

கரப்பான் பூச்சிகள் கூட

கட்டபொம்மன்கள் தான்....

- கவிஞர்.மு.மேத்தா

தமிழன் பிரசன்னாவின்

முகநூல் பதிவிலிருந்து

வருத்தம்

மிகவும் வருத்தத்துடன் இதனை எழுதுகிறேன். சப்& எடிட்டர் வேலைக்கு இதுவரை பதின்மூன்று ரெஸ்யூம்கள் வந்துள்ளன. ஒன்று கூட பிழையில்லாமல் இல்லை.

பதிப்பாளர் ஹரன்பிரசன்னாவின்

முகநூல் பதிவு

நேர்மைக்கு சோதனை

ஒரு நண்பர் புத்தகக் கண்காட்சியில் தனது நூலைத் தந்தார். படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்றார். சரி என வாங்கிக்கொண்டேன். இதுவரை ஐந்தாறு முறை கேட்டுவிட்டார் படித்தாயிற்றா என... ‘வேலை இருக்கிறது ஐயா' என்றே தன்மையாய் சொல்லி வந்தேன். ‘உங்களால் படித்துவிட்டு எழுத முடியாது என்றால் நேர்மையாகச் சொல்லிவிடுங்கள்' என்றார். இதென்னடா என் நேர்மைக்கு வந்த சோதனை என அவரின் முகவரி வாங்கி நூலை திருப்பி அனுப்பி வைத்தேன்.

இளங்கோ கிருஷ்ணனின் முகநூல் பதிவு

ஸ்ரீதேவி இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்ஸ்டா கிராமில் அவரது மகள் ஜான்வி, ‘எங்குபோனாலும் உன்னைத் தேடுகிறேன் அம்மா. உன்னைப் பெருமை அடைவாய் என நம்பியே நான் எல்லாவற்றையும் செய்கிறேன். எங்கு போனாலும் எதைச் செய்தாலும் உன்னில் தொடங்கி உன்னிலேயே முடிகிறது' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அரசிகளின் பெயர்கள்

பொதுவாகத் தொன்மங்களில் அரசிகள்/இளவரசிகள் பெண்கள் அவர்களது நாட்டின் பெயராலேயே குறிக்கப்படுகிறார்கள். பாஞ்சால இளவரசி

பாஞ்சாலி. மாத்ர நாட்டு இளவரசி மாத்ரி. கேகேயத்தின் இளவரசி கைகேயி. கோசல நாட்டு இளவரசி கோசலை

(கௌசல்யா). அவர்கள் மட்டுமல்ல, மற்ற பெண்களும்-தான் வனத்தில் ஜனித்தவள் வனஜா. மலையில் பிறந்தவள் கிரிஜா. நீரில் பிறந்தவள் ஜலஜா. தாமரையில் பிறந்தவள் பத்மஜா. சிந்து நதிக்கரையில் பிறந்தவள் சிந்துஜா.

மாலன் நாராயணன், முகநூல் பதிவில்

மார்ச், 2023