அனிருத்துக்கு கார் பரிசளிக்கும் கலாநிதி மாறன்
அனிருத்துக்கு கார் பரிசளிக்கும் கலாநிதி மாறன்

கலாநிதி மாறன் கொடுத்த காரை பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன்! – அனிருத் நெகிழ்ச்சி

கலாநிதி மாறன் கொடுத்த காரை பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன் என்று இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் இருவரும் ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், “சென்னையிலிருந்து கிளம்பி நானும் அட்லியும் ஷாருக்கான் படத்தில் வேலைப் பார்த்துள்ளோம். இந்தியாவிலேயே இது பெரிய படம். பான் இந்தியா என்பது ஒரு கோல்டன் டைம்.” என்றார்.

ஜெயிலர் படத்துக்குக் கிடைத்த கார் கிஃப்ட் விக்ரம் படத்துக்கு ஏன் கிடைக்கவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அனிருத்,“எனக்கு விக்ரம் படம்தான் கிஃப்ட். ஜெயிலர் படமும் அப்படித்தான். ஜெயிலர் படத்தை விட ஆல்டைம் ரெக்கர்டு அடித்ததுதான் கிஃப்ட். கலாநிதி மாறன் காரை பரிசளித்தது மறக்க முடியாது நிகழ்வு. பொதுவாக இயக்குநரை, நடிகரைத்தான் கெளரப்படுத்துவார்கள். ஆனால், முதல் முறையாக இசையமைப்பாளரை கெளரப்படுத்தி இருக்கிறார்கள். கலாநிதி மாறன் கொடுத்த காரை பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com