ஜெயிலர் திரைப்படம்
ஜெயிலர் திரைப்படம்

ஜெயிலர் படத்தின் ‘ரத்தமாரே’ பாடல் ரிலீஸ்!

ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தமாரே என்கிற பாடலை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தமாரே என்கிற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தில் இருந்து முதல் பாடலாக வெளியான காவாலா பாடல் வெளியாகிய 3 வாரங்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com