திரைத்துறையில் 22ஆண்டுகள்… படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்... த்ரிஷா நெகிழ்ச்சி!

த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜி
த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜி
Published on

சூர்யா 45 படப்பிடிப்பில் நடிகை த்ரிஷாவின் 22 ஆண்டுகால நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோவினை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடைத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களின் மூலம் மீண்டும் த்ரிஷா ஃபார்முக்கு வந்துள்ளார். ரோடு படத்தில் நாயகிக்கு முக்கியத்துக் கொடுக்கும் படத்தில் நடித்திருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

தற்போதுசூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சூர்யாவும் த்ரிஷாவும் 'ஆறு' திரைப்படத்தில் நடித்திருந்தனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், த்ரிஷா திரைத்துறைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், சூர்யா 45 குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இது தொடர்பன வீடியோவை ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

த்ரிஷா அஜித்துடன் நடித்துள்ள விடா முயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஷ்வம்பரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com