விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் - நயன்தாராஇன்ஸ்டாகிராம்

எனது தங்கத்துடன் ஒரு தசாப்தம்!– உருகிய விக்னேஷ் சிவன்!

காதலர் தினத்தையொட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் தன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், “காதலை நம்பும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள். எனது தங்கத்துடன் ஒரு தசாப்தம். எனது உயிரும் உலகமுமாய் இருந்தவள் நீ; தற்போது உயிர் உலகம் நாமாக மாறியிருக்கிறோம். வயது முதிர்வில் இன்னும் கடந்து வந்த பல தருணங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.

நமது முதுமையிலும் அடுத்த பிறவிகளிலும் ரசிக்க பல தருணங்களுடன் நீண்ட தூரம் என்னுடன் வந்ததற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். எனது உயிரானவளே, உன்னை அதிகமாகக் காதலிக்கிறேன்.” என்று விக்னேஷ் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com