அமீர் - வெற்றிமாறன் சந்திப்பு
அமீர் - வெற்றிமாறன் சந்திப்பு

பருத்திவீரன் சர்ச்சை: சூர்யா படத்தில் அமீர் தொடர்வார் – வெற்றிமாறன் சூசகம்!

பருத்தி வீரன் பட விவகாரம் மீண்டும் சர்ச்சையான நிலையில், வாடிவாசல் திரைப்படத்தில் இயக்குநர் அமீர் நடிப்பாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அதற்குப் பதிலாக அமைந்துள்ளது.

பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை இயக்குநர் அமீர் பொய்க் கணக்கு கூறி திருடிவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, பெண்வண்ணன் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனால், ஞானவேல்ராஜாவுக்கு இதுவரை யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் நடிப்பாரா, இல்லையா என்ற கேள்வியை பலரும் சமூக ஊடகங்களில் எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் தன் தயாரிப்பு நிறுவனத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாடிவாசல் படத்தில் அமீரின் கதாபாத்திரம் வலுவாக இருப்பதாகவும் அதுகுறித்து வெற்றிமாறன் சில தகவல்களை அமீரிடம் பகிர்ந்ததாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com