நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘துணிவு’ வெற்றிக்குப் பின் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்தது.

அடுத்தகட்டப் படப்பிடிப்பும் வெளிநாட்டில் நிகழ உள்ளதால், நடிகர் அஜித் குமார் இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று நாள் முழுவதும் மருத்துவமனையில் தங்கி உடல் பரிசோதனை மேற்கொள்ளும் அஜித் நாளை வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com