கேப்டன் மில்லர் பட விழாவில் நடிகர் தனுஷ்
கேப்டன் மில்லர் பட விழாவில் நடிகர் தனுஷ்

அப்பா பெயரைக் காப்பாத்துங்க... யாரைச் சொல்கிறார் தனுஷ்?

“அப்பா பெயரைக் காப்பாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் இல்லை” என்று நடிகர் தனுஷ் நேற்று பேசியது யாரைக் குறிப்பிட்டு என கேள்வி எழுந்துள்ளது.

தனுஷ், மாளவிகா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜனவரி 12ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது, கேப்டன் மில்லர் படம். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். சக்தி ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இப்படத்தில், நீண்ட நாள்களுக்குப் பிறகு தனுஷை மிரட்டலான ஆக்‌ஷன் ஹிரோவாகத் திரையில் பார்க்கலாம்.

இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர் மாரிசெல்வராஜ், மாளவிகா மோகன், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், காளி வெங்கட் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய நடிகர் தனுஷ், "2002 ஆம் ஆண்டிலிருந்து நான் சிறுகச் சிறுக சேர்த்த துளிகள் எல்லாம் இன்றைக்கு பெரும் வெள்ளமாகத் திரண்டு வந்திருக்கீங்க. 'கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்' இந்தப் படத்தை பற்றி நினைத்ததும் நம்ம நினைவுக்கு வருவது உழைப்புதான். அவ்ளோ உழைப்பு இதுல இருக்கு. இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.

அதுக்கு உண்மையான காரணம் அருண் மாதேஸ்வரன்தான். அருண் மற்றும் இந்த படக்குழுவினரோட உழைப்பைப் பார்த்ததும், நான் கஷ்டப்பட்டேனென்று சொல்லக் கூச்சமா இருக்கு.

அருண், வெற்றி மாறன் என நான் சில இயக்குநர்களோட தொடக்கத்திலிருந்து வேலை பார்த்திருக்கிறேன்.

என்கிட்ட ஒரு கதை இருக்குன்னு வெற்றிமாறன் சொன்னார். அப்படி ஒரு திறமை அவருக்கு இருந்தது. அதே திறமை அருண்கிட்டயும் இருக்கு.

கேப்டன் மில்லர் படத்தோட லைனை 15 நிமிடங்கள்..ல சொன்னாரு. படம் பெரிய ஸ்கேலில் இருந்தது. ஆக்சன் காட்சிகள் பண்ணிட முடியுமான்னு கேட்டேன். 'ம்ம்' பண்ணிடலாம்’னு சொன்னாரு. இப்போ படம் பார்த்தேன் ரொம்ப நல்லா வந்திருக்கு. அப்போதான் தெரிஞ்சது, அருண் சம்பவம் பண்ணப்போற கைன்னு... இந்தப் படம் மூலமாக உங்களுக்குன்னு ஒரு பெரிய பேர் கிடைக்கும். இதே அரங்கத்துல உங்களுக்குக் கரவொலிகள் எழும்பும்" என்று இயக்குநர் அருண் மாதேஸ்வரனை வாழ்த்தினார் .

”பொல்லாதவன் சமயத்துல க்ளைமேக்ஸ்ல ஒரு சீன் மாத்தணும்னு ஒரு மியூசிக் டைரக்டர் சொன்னார். அதை மாத்துறதுக்கு விருப்பம் இல்லைன்னு வெற்றிமாறன் சொன்னாரு. நான் இசையமைப்பாளரை மாத்திடலாம்னு சொன்னேன்.

அப்போ வெயில் படத்தோட பாட்டு கேட்டேன் 'உருகுதே மருகுதே' பாடல் நல்லா இருக்கு; அந்த இசையமைப்பாளரை போடலாம்னு சொன்னேன். எப்போ போன் பண்ணாலும் ' சொல்லு மச்சான்'னு ஜி.வி.பிரகாஷ் சொல்லுவாரு. அவை நாகரிகம் கருதி அவர் இவர்னு நாங்க வெளியில பேசிக்குவோம்." என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தனுஷ், கன்னட நடிகர் சிவராஜ்குமாரைப் பார்த்தபடி, “அப்பா பெயரைக் காப்பாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் இல்லை. உங்களைப் பார்த்துதான் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். எனது இரண்டு மகன்களும் இங்குதான் இருக்கிறார்கள். அவர்களும் உங்களைப் பார்த்து நிச்சயம் கற்றுக்கொள்வார்கள்.

உங்களோட பணிவு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு வீட்டு சாப்பாடு கிடைக்கலைன்னு சொன்னதும் வசதி இல்லாம இருந்த சின்ன அறையிலயும் எனக்கு சிவாண்ணாவோட மனைவி சமைச்சுக் கொடுத்தாங்க.

இந்தப் படத்தோட கடைசி முப்பது நிமிடங்களைப் பார்க்கும் போது எனக்கு திருப்தியா இருந்தது. உங்களுக்கும் அதேதான் தோணும்னு நினைக்கிறேன். கேப்டன் மில்லர் டேக் லைன் 'Respect is freedom', மரியாதைதான் சுதந்திரம்.

யாருக்கு இங்க சுதந்திரம், மரியாதை இருக்குன்னு தெரியல. எதைப் பேசினாலும் பார்த்துப் பார்த்து பேச வேண்டியதா இருக்கு. கேப்டன் மில்லர் ஒரு சர்வதேசப் படமா இருக்கும். லீனியர் நான்லீனியர் 'Linear, non-linear' தாண்டி பெருசா ஒரு விஷயம் அருண் பண்ணியிருக்காரு.

வடசென்னை-2 கண்டிப்பாக வரும். இத்தனை உள்ளங்கள் கேட்கும்போது கண்டிப்பாக வரும். மாரி செல்வராஜ் பண்றது ரொம்பப் பெரிய விஷயம். அவர் மேல மரியாதை அதிகமாகிட்டே இருக்கு" என்றவர்,

கடைசியாக, 'ராசாத்தி உன்ன... காணாத நெஞ்சு...' பாடலை ரசிகர்களுக்காக பாடிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com