கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா! – லேசான காயம் என தகவல்!

சின்ன சேலம் அருகே நடிகர் ஜீவான் கார் விபத்துக்குள்ளான காட்சி
சின்ன சேலம் அருகே நடிகர் ஜீவான் கார் விபத்துக்குள்ளான காட்சி
Published on: 

கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நடிகர் ஜீவா தன் குடும்பத்தினருடன் காரில் கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அவரே காரை ஓட்டி வந்த நிலையில், சின்ன சேலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஜீவா காரை திருப்பியுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பின்மீது மோதியுள்ளது. நல்வாய்ப்பாக, லேசான காயங்களுடன் ஜீவா பெரிய விபத்திலிருந்து தப்பியுள்ளார்.

காருக்குள் இருந்தது நடிகர் ஜீவா எனத் தெரிந்ததும் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, மாற்று காரில் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து அவர் கிளம்பினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com