பிரதீப் கே விஜயன்
பிரதீப் கே விஜயன்

தனியாக வசித்து வந்த இளம் நடிகர் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரை உலகம்!

சென்னையில் தனியாக வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெகிடி, டெடி, லிஃப்ட் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரதீப் கே விஜயன். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சென்னையில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதீப் கே விஜயன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதீப் கே விஜயன், கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

இதனால், காவல்துறை உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com