ரா.சங்கரன்
ரா.சங்கரன்

'மெளன ராகம் சந்திரமௌலி' சங்கரன் மறைவு - பாரதிராஜா, சரத்குமார் இரங்கல்!

இயக்குநரும், ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி அப்பாவாக நடித்தவருமான ரா.சங்கரன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.

ரா. சங்கரன் ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, அழகர் சாமி, மௌன ராகம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது, தேன் சிந்துதே வானம், தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், சங்கரன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். ரா.சங்கரன் மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான மெளன ராகம் புகழ் ரா.சங்கரன் வயது மூப்பின் காரணமாக மறைந்த செய்தி வேதனையளிக்கிறது.

அவரை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com