பிரதமர் மோடிக்கு வரலட்சுமி - நிக்கோலாய்  திருமண அழைப்பிதழை வழங்கும் சரத்குமார்
பிரதமர் மோடிக்கு வரலட்சுமி - நிக்கோலாய் திருமண அழைப்பிதழை வழங்கும் சரத்குமார்

பிரதமருக்கு திருமண அழைப்பிதழ்... ரவுண்டு கட்டும் நடிகை!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். நடிகர் சரத்குமார், ராதிகா, வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம்வரும் வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வை திருமணம் செய்யவுள்ளார்.

ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

இதில், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார் சரத்குமார். அதேபோல், வரலட்சுமியும் திரையுலகைச் சார்ந்த பலருக்கும் ரவுண்டி கட்டி திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்.

இதனிடையே டெல்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். தனது வருங்கால கணவர் நிக்கோலாய், பெற்றோர் சரத்குமார் - ராதிகா ஆகியோருடன் சென்று மோடிக்கு அழைப்பிதழ் வழங்கினார். அப்போது வரலட்சுமி மட்டும் தனியாக பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்தும் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார். இது தொடர்பான விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலட்சுமி பகிர்ந்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com