நடிகர் விஜய்
நடிகர் விஜய்

விஜய் 70? பரபரக்கும் ரசிகர்கள்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று தன் 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வி.சி.க. தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் உட்பட பலரும் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை வரலட்சுமி, இயக்குநர் அட்லி உட்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கோட் படத்தைத் தொடர்ந்து, 69ஆவதாக விஜய் கடைசியாக ஒரு படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு நெருக்கமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வாழ்த்துக் காணொலியில், விஜய் 69ஆவது படத்தில் நடிப்பதை கடிகாரச் சுற்றில் காண்பித்துள்ளதுடன், 70ஆவது எண்ணையும் தொடுவதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜய் மேலும் ஒரு படத்தில் நடிப்பார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com